2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முன்னாள் பேராளிகளின் வாழ்வாதாரத்துக்கு புதிய தொழிற்சாலைகள்: கருணாகரம்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

கடந்த கால யுத்தத்தின் போது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி, முன்னாள் போராளிகள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை அதிகாரிகள்  உறுதியளித்துள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) சனிக்கிழமை (19) தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்படவுள்ள, ஏறாவூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் கூறுகையில்,

'வடக்கு, கிழக்கில் கடந்த கால யுத்தத்தின் போது, பாடசாலை கல்வியை கைவிட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க தொழிலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் இன்மையால், திருமண வாழ்க்கையிலும் ஈடுபட் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் 7ஆயிரம் பேர், போராட்டத்தின் போது கணவனை இழந்தவர்கள் ஆவர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .