2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'மாற்றம் என்பது உள்ளத்திலிருந்து வரவேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது அதன் ஆசியர்களுக்கு கிடைத்த பெரிய பாக்கியமாகும் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

கிழக்கிலங்கை ஹாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற  கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றகையில்,

விசேட தேவையுடைய மாணவர்களை சிறந்த கல்வியலாளர்களாகவும் சிறந்த ஆற்றலுடையவர்களாகவும் மாற்றுவதென்பது சவாலுக்குரியதாக இருந்தாலும் ,அந்த சவாலை ஏற்றுக் கொண்டு அவர்களை சமூகத்தில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டும்.

இது ஒரு சவாலான விடயம் என்பதை ஆசியர்கள் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். அவர்களுடன் இனிமையாக பழக வேண்டும்.

அவர்களை அதட்டி அச்சுறுத்தினால் அவர்கள் ஆசிரியர்களை பயங்கரவாதிகள் போல் பார்த்து மிரண்டு விடுவார்கள். அவ்வாறு ஆசிரிகள் நடந்து கொள்ளக்கூடாது.

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அந்த மாற்றம் என்பது உள்ளத்திலிருந்தே வரவேண்டும்.

விசேட தேவையுடைய மாணவர்கள் பலர் பல்வேறு திறமையுடையவர்களாக இருக்ககூடும். அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தரிசனம் பாடசாலையில் கற்ற ஒரு விஷேட தேவையுடைய மாணவர் பட்டதாரியாகியுள்ளார் என்று நாம் அறிகின்றோம். இது மகிழ்ச்சியான விடயம். இவ்வாறு சிறந்த கல்வியறிவை அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .