2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட, கிழக்கு முஸ்லிம் காங்கிரஸின் பெயர் மாற்றம்

Suganthini Ratnam   / 2017 மே 22 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வட, கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் பெயர், கிழக்கு முஸ்லிம் முன்னணி என்று  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்தார்.

இந்தக் கட்சியின் வருடாந்த செயற்குழுக் கூட்டம், காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை நடைபெற்றபோதே, அக்கட்சிக்கான பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்தன் கூட்டத்தின்போதே வட, கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து செயற்படுவது,  தனிக் கிழக்கு என்ற பிரகடனத்துடன் செயற்படுவது, அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெறும்; சம்பவங்களை முஸ்லிம் நாடுகளுக்கும் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்துவது, எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவது போன்ற தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டன எனவும் அவர் கூறினார்.

இந்தக்; கட்சியின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறும்வரையில், கிழக்கு முஸ்லிம் முன்னணியின் தலைவராக யு.எல்.எம்.தௌபீக்கும் பொதுச் செயலாளராக வி.ரி.எம்.முபாறக்கும் அரசியல் செயலாளராக ஏ.யு.எல்.எம்.ஹரிஸும்; செயற்குழு உறுப்பினர்களாக 12 பேரும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .