2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி எனும் கிராமத்தில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியில் குடியிருக்கும், பயன் கொள்ளும் மக்களுக்கான உறுதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, மட்டக்களப்பு மாவட்ட செயலகககேட்போர் கூடத்தில், அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில், நேற்று (21), காலை நடைபெற்றது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியில் குடியிருக்கின்ற அல்லது பயன்கொள்கின்ற மக்களுக்கு, அக்காணிக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரு விசேட அறிவூட்டலாக இது அமையும் என்றும் இவ்வாறான நிகழ்வுகள் நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில், காணி உரிமையாளர்களின் நியதி சட்டதிட்டங்கள், கடமைகள், பொறுப்புக்கள் பற்றியும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கானத் தீர்வுகள் பற்றிய விரிவான விடயங்களை, மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜ் தெளிவுபடுத்தினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .