2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எரிவாயு சிலின்டர் வெடித்ததில் 04 மீனவர்கள் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற படகிலிருந்த சமையல் எரிவாயுச் சிலின்டர் வெடித்ததால்,  04 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த படகின் மேல் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு தங்கியிருந்து  மீன்பிடிப்பதற்கு ஆயத்தமாக   குறித்த படகில் 04 பேர் கடந்த சனிக்கிழமை (19)  ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், குறித்த படகிலிருந்த சமையல் எரிவாயுச் சிலின்டரில் கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிய  நிலையில்  அச்சமையல் எரிவாயுச் சிலின்டர் செவ்வாய்க்கிழமை (22) இரவு வெடித்ததாக வாழைச்சேனை பொலிஸில் மேற்படி 04 மீனவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு படகில் இருந்தவர்களின்  உதவியுடன்  காயமடைந்தவர்கள் சேதமான படகுடன் புதன்கிழமை  (23) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.

காயமடைந்த 04 மீனவர்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றுமொருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .