2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிலக் கண்ணி வெடியில் சிக்கி உயிர்நீத்தவர்களின் 20 ஆவது ஆண்டு சுஹதாக்கள் தினம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி மீயான்குளச் சந்தியில் வைக்கப்பட்ட நிலக் கண்ணி வெடியில் உயிர்நீத்தவர்களின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சுஹதாக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், ஏ.பி.டிம்.இர்பான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விசேட துஆப் பிரார்த்தனையை வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளி வாயல் பேஷ் இமாம் எம்.முஸம்மில் நடத்தியதுடன் நினைவுரைகளை இலங்கை நிர்வாகச் சேவை
உத்தியோகத்தர் பி.ரீ.எம்.இர்பான், ஜாமியா நளீமியா கலாபீட விரிவுரையாளர் ஏ.பி.எம்.இத்ரீஸ், வாழைச்சேனையில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோர் நடாத்தினர்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி நிலக் கண்ணி வெடியில் சிக்கி எழுத்தாளரும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான வை.அஹமத், ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து நிர்வாகச் சேவைக்கு தெரிவானவரான ஏ.கே.உதுமான், சட்டத்தரணி ஏ.பி.எம்.முஹைதீன், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.எஸ்.மகுமூது, விறகு வியாபாரி எஸ்.ஏ.சாகுல் ஹமீட் ஆகியோர் உயிரிழந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .