2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கிரான் பகுதியில் நீர் வழங்கல் திட்டம், சுகாதார வைத்திய நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராக்கி)

மீள்குடியேற்றம் இடம்பெற்ற கிரான் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், இ.எஸ்.சி.ஒ. நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம், சுகாதார வைத்திய நிலையம் போன்றன நேற்று திறந்துவைக்கப்பட்டன.

மினுமினுத்த வெளி பகுதியில், பல வருடங்களாக சிக்கலுக்கு உள்ளான நீர்ப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வாக சுவிஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தின் திறப்பு விழா, இ.எஸ்.சி.ஒ. நிறுவன பணிப்பாளர் எஸ்.ஸ்ப்ரித்தியோன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிரான் பிரதேச செயலாளர் வீ.தவராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த நிறுவன அதிகாரி, இந்த நீர் வழங்கல் திட்டத்தால் 140க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவதாக கூறினார்.

இதேவேளை, அக்கிறானையில் சுகாதார வைத்திய நிலையமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X