2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொல்பொருள் பற்றி தெரிவிக்கப்படக் கூடாது என மிரட்டப்படுவதாக புகார்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

தொல்பொருட்கள் பற்றியோ புதையல்கள் பற்றியோ யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் பகுதியில் ஆயுதங்களுடன் வரும் நபர்கள் பொதுமக்களை மிரட்டி வருவதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகரைப் பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட பகுதியில்  தொல்பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த மாதங்களில் குழிகள் தோண்டப்பட்டதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அத்துடன் இருவர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

இதன் பின்னர் இந்தப் பிரதேசங்களில் அடிக்கடி பொலிஸ் என்றும் புலனாய்வுப் பிரிவினர் என்றும் பலர் வருகை தருவதாகவும், அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் ஆபத்து நேரும் என மிரட்டப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரனிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வாகரை பொலிஸ் நிலையம் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி இம்மக்களின் முறைப்பாடுகளை ஏற்று அவர்களுக்கான முடிவுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் கேட்டிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .