2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் 8 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எல்.தேவ்)

மட்டக்களப்பில் மாவட்டத்திலுள்ள எட்டு வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திரசிகிச்சை விடுதி பூரண பாவனையின்றி காணப்படுவதாகவும் மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் துரிதகதியில் அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்று வருகின்றதே தவிர, சமூகத்தின் பற்றுமட்டம் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு மாற்ற நிலை அடையாதது வேதனைனக்குரியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வருடாந்தம் 13 தொடக்கம் 20 பேர் வைத்தியத் துறைக்கு தெரிவாகிச் செல்கின்ற போதும் இவர்கள் வெளியேறி சொந்த மாவட்டத்தில் சேவை செய்ய விரும்பாமல் வெளிநாடுகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் செல்வதே வைத்தியர்கள் இல்லாதிருப்பதற்கு காரணம் ஆகும்.

மண்டுர், பளுகாமம், மகிழடித்தீவு, புதுமண்டபத்தடி, நாவற்காடு, கதிரவெளி, மாங்கேணி ஆகிய வைத்திய சாலைகளின் நிரந்தர வைத்தியர்கள் இன்றி குறிப்பிட்ட நேரம் பதில் வைத்தியர்கள் கடமைக்குச் சென்று வருகின்றனர்.

இருக்கின்ற வைத்தியர்களைக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் சமாளித்து வருகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண மருத்துவக் கல்லூரியல் இருந்து இம்முறை வெளியேறும் வைத்தியர்கள் 25 பேரை பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்ததனை நாம் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஊடாகவும் வலியுறுத்தியாதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுணதீவு புதுமண்டபத்தடி கிராமிய வைத்தியசாலையை பார்வையிட்ட அவர், இவ்வைத்தியசாலையில் 125 தொடக்கம் 140 நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சை பெற செல்கின்ற நிலையில் பௌதீக வளங்கள் ஓரளவு இருந்த போதும் ஒரு பதில் வைத்தியரே பகல் நேர கடமையில் ஈடுபட்டு வருகின்றார். ஒரு தாதி உத்தியோகத்தரும் தொடர்ச்சியான கடமையில் ஈடுபட்டு வருகின்றார்.

இரவு நேர அவசர சிகிச்சைகளுக்காக இங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், இது குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X