2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலைக்கு அமைச்சர் முரளிதரன் விஜயம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)
மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாடசாலை நிருவாகத்தினருடன் பாடசாலையின் குறை- நிறைகளைக் கேட்டறிந்ததுடன் அங்கு கற்றுவரும் மாணவ மாணவிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன், கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் செல்வி ஜமுனா, விளிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகசபைத் தலைவர் ஏ.ஜீவராஸா, செயலாளர் ஏ.ரவீந்திரன், பொருளாளர், ஜீ.வரதராஜன், நிருவாக சபை உறுப்பினரான முருகு தயானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகத்தினர், தமது மாணவர்களின் தொழில் பயிற்சிகளை மேம்படுத்தும் நோக்கிலும் எதிர்கால செயல்திட்டங்களுக்காகவும் தொழில் பயிற்சி நிலையம் அமைப்பதற்கும் அத்துடன் வலது குறைந்தோருக்கான ஆசுவாசப்படுத்தும் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் தமது முன்பகுதியில் உள்ள காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அனைவருடனும் கலந்துரையாடிய அமைச்சர் பாடசாலையின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு விரைவில் ஆவன செய்து தருவதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X