2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

குற்றங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

 

 

                                                (வதனகுமார்)

கிராமங்களில் குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவ வேண்டும் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி பி.ஆர்.எஸ்.நந்தகுமார தெரிவித்தார்.

அண்மையில் களுதாவளையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் வழிகாட்டலில் ஒவ்வொரு கிராமத்திலும் மாதாந்தம் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி கருத்தரங்கில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"மக்கள் பொலிஸாரை நண்பராகவும் உறவினராகவும் நோக்க வேண்டும். எமது பகுதி சுத்தமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டுமானால் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் அதனை ஏற்படுத்தலாம்.

இன்று எம்மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு குற்றச்செயல் நிகழும் போது அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினால் அது நடைபெறாமல் தடுக்கப்படும்.

30 வருட கால பயங்கரவாதம் இன்று ஒழிக்கப்பட்டு மக்கள் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழ்நிலையில் அவர்களது சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது கலாசாரங்களை வளர்த்து சமய சிந்தனைகளை கொண்டு தமது வாழ்க்கையினை கொண்டு நடத்தும் போது நம் வாழ்வு எந்தப்பிரச்சினையும் இல்லாமல் செல்லும். இதனை ஒவ்வொருவரும் கைக்கொள்ளும்போது குற்றங்கள் குறையும்" என்றார்.

களுதாவளை பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி வெலகும்புர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் களுதாவளை ஆலயங்களின் நிர்வாகத்தினர், இளைஞர் மன்ற உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழங்களின் உறுப்பினர்கள், மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள்  என பலர் கலந்துகொண்டனர்.

alt
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .