2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுணதீவுப் பிரதேச அபிவிருத்தியை மத்திய மற்றும் மாகாண அரசுகள் திட்டமிட்டு புறக்கணிக்கின்றன- இரா.துரைர

Super User   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                 (கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவுப் பிரதேச அபிவிருத்தியை மத்திய மற்றும் மாகாண அரசுகள் திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் கூறியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும், படுவான்கரைப் பகுதி கடந்த 30 வருடங்களாக யுத்த சூழ்நிலையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகிய போதிலும் அப்பகுதி மக்களின் அபிவிருத்தியில் மத்திய அரசும் மாகாண அரசும் புறக்கணித்து வருகின்றமை, கடந்த காலங்களில் இடம்பெற இருந்த அபிவிருத்திப் பணிகள் நிறுத்தப்பட்டமை மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டமை ஊடாக புலனாகின்றது எனத் தெரிவித்துள்ள அவர், இது விடயமாக கவனம் செலுத்துமாறும் கிழக்கு  மாகாண ஆளுநரைக் கோரியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர்மேலும்,

"மேய்ச்சல் தரைக்கும் மேட்டுநில பயிர் செய்கைக்கும் காணி போதாது உள்ள நிலையில், வெளிநாட்டு கம்பனிகளுக்கு காணிகளை வழங்குவதற்கு சில அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நடவடிக்கை இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

உன்னிச்சை குளத்தில் இருந்து வரும் நீரை அப்பகுதியில் உள்ள உவர் நீர் உள்ள இடங்களுக்கும் வரண்ட பிரதேசங்களுக்கும் வழங்காமல் போதியளவு நீர் உள்ள பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் முறையிட்ட போது சில கிராமங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுத்த போதும் வேலை ஆரம்பிப்பதாக இதுவரை இல்லை.

பாவற்கோடிச்சேனை கிராம அபிவிருத்திக்கு முதலமைச்சரினால் ஏழு கோடிக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டிருந்து. சகல வேலைகளும் ஆரம்பிக்க இருந்த நிலையில் அந்நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் விரக்த்தியடைந்த நிலையில் உள்ள நேரத்தில் வவுணதீவுப் பாலம், வவுணதீவில் இருந்து ஆயிதிதியமலை வீதி, மதகுகள், சிறிய பாலங்கள், சத்துருக்கொண்டான் வீதி உட்பட வீதி அபிவிருத்திக்காக சுமார் 700 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஊடாக ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, வேலை ஆரம்பிக்க இருந்த நிலையில் ஒரு வாரத்தின் பின் வேலை நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு  நீதிமன்றில் ஒப்பந்தகாரரினால் தொடரப்பட்ட வழக்கு ஆறு மாதமாக உள்ளது.

வேலை நிறுத்தப்பட்டு ஒரு வருடம் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதற்கான முழுப் பொறுப்பினையும் இதில் பங்கு கொண்ட மத்திய உள்ளுராட்சி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகள் திட்டமிட்டபடி புறக்கணிக்கப்பட்டு செல்வது இப்பகுதி மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அழிகளை முன்னெடுக்க உதவுமாறு வலியுறுத்துகின்றேன்" என கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .