2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ், எவ்.முபாரக்)

கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் இந்திராணி தர்மராஜா தெரிவித்தார்.
 
இதன்படி ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, முனைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
 
கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் கீழ் ஆயுர்வேத வைத்தியத் திணைக்களத்தால் ஒரு பொது வைத்தியசாலையும், இரண்டு மாவட்ட வைத்தியசாலையும் 3 கிராமிய வைத்தியசாலையும் இயங்குகின்றன. அத்துடன் 3 பஞ்ச தர்ம வைத்தியசாலையும் இயங்கி வருகிறது.
 
இவற்றில் நிரந்தரமாக 40 வைத்தியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 20 வைத்தியர்களும் சேவையாற்றுகின்றனர். இதேவேளை 25 வைத்தியர்கள் மேலும் நியமிக்கப்படவுள்ளனர்.
 
அத்துடன், ஆயுர்வேத வைத்தியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படவுள்ளதுடன் சுற்று அடிப்படையிலும் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .