2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத பொருட்களை விற்ற வர்த்தக நிலையத்திற்கு சீல் வைப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

 

 

(றிபாயா நூர்)

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பல சரக்கு வர்த்தக நிலையமொன்றில் காலாவதியான மற்றும் மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மற்றும் மென்பானங்கள் என்பவற்றை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதோடு குறித்த வர்த்தக நிலையத்தையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்து மூடியுள்ளனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எஸ்.ஜாபீரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான றஹ்மத்துல்லா மற்றும் பசீர், குலேந்திரகுமார் ஆகியோர் இவ்வர்த்தக நிலையத்தில் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்த பிஸ்கட் வகைகள், மாஜரின் வகைகள், மென் பானங்கள், கடலை வகைகள் என பல காலாவதியான மற்றும் மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அத்தோடு குறித்த வர்த்தக நிலையத்தையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்து மூடியுள்ளனர்.

குறித்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜாபீர் கூறினார்.

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .