2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடியாளர் மீது சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ்கடல் மற்றும் வாவி மீன்படியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திவரும் சட்டவிரோத வலைகளை மாவட்ட கடற்றொழில் தலைமையகத்தில் கையளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று திங்கட்கிழமையுடன் முடிவடைந்துள்ள போதிலும் சட்டவிரோத வலைகள் எவையும் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இவ்வாரம் முதல் சட்டவிரோத வலைகளை வைத்திருப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிபணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்னவின் வழிகாட்டலில் குறித்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X