2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் வாகன விபத்து, குற்றச்செயல்களை தடுப்பதற்கான செயலமர்வு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பஸ் சாரதிகளுக்கு விசேட செயலமர்வுகளை பொலிஸ் திணைக்களம் தற்போது நடத்தி வருகின்றது.

கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதினலகன் ஆலோசனைக்கமைய மாவட்ட சிரேஷ்ட அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்னவின் வழிகாட்டுதலில் பொலிஸ் பிரிவுகள் தோறும் இச்செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகளுக்கான செயலமர்வு சமீபத்தில் மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் கூட்டுறவு கலையரங்கில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் வாகன விபத்துக்களையும் குற்றச்செயல்களையும் குறைப்பதற்கு முச்சக்கரவண்டிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகளின் பிரதான ஒத்துழைப்பு பற்றி அறிவூட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X