2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிரான் பாலத்தை திருத்துவது குறித்து பேச்சுவார்த்தை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

நீண்டகாலமாக திருத்தப்படாதுள்ள மட்டக்களப்பு கிரான் பாலத்தைத் திருத்துவது சம்பந்தமாக மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீன அரசாங்கம் என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவை, புலிபாய்ந்தகல் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களின் முக்கிய பாதையாக கிரான்  பாலம் விளங்குகிறது.

நீண்டகாலமாக திருத்தப்படாதுள்ள இப்பாலத்தினை அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேளை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பார்வையிட்டார்.

இதன்போது அமைச்சருடன் அவருடைய இணைப்புச் செயலாளரான பொன் ரவீந்திரன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

இவ் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், யுத்தம் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பாலத்தை விரைவாகத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதி சிறந்த முறையில் விரைவில் பாலம் திருத்தியமைக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .