2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாழைச்சேனை பிரதேச சபையின் உப தலைவர் பொலிஸில் தடுத்துவைப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
 
வாழைச்சேனை பிரதேச சபையின் உப தலைவர் வடிவேல் ரவிச்சந்திரன் (புவி) குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை அவரது தனிப்பட்ட அலுவலகத்தில் கடமையிலிருந்தவேளை தனது கணவர் வாகனமொன்றில் வந்த குற்றப் புலனாய்வுத் துறையினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் சகிதம் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
பின்னர் தனது கணவனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டிருந்ததாகவும் ரவிச்சந்திரன் செல்வேந்தினி கிழக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனை நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளதாகவும் அவர் என்ன காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை தன்னால் அறிய முடியவில்லை என்றும்  ரவிச்சந்திரன் செல்வேந்தினி " தமிழ் மிரர்"க்கு  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .