2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையின் புதிய கட்டிடம் மக்கள் பாவனைக்கு

Super User   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் புதிய கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை மாலை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இக்கையளிப்பு வைபவத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், காத்தான்குடிஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நசீர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டு  மக்கள் பாவனைக்கு கையளித்தனர்.

சுனாமி அனர்த்தினால் முற்றாக சேதமடைந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டு செஞ்சிலுவைச்சங்கத்தின் 650 மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் கட்டப்பட்டது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, புதிய கட்டிடத்தில் இன்று முதல் செயற்படவுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக காத்தான்குடி பொது நூலக கட்டிடத்தில் காத்தன்குடி ஆதார வைத்திய சாலை இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X