2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வீதி நாடகங்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மக்கள் மத்தியிலான உளநலம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான கையாள்கைகள் குறித்த வீதி நாடகங்களை நடத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தினரால் இந்த வீதி நாடகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் நடத்தப்பட்டன.

அதனைத் தோடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னாலும் செங்கலடி நகரிலும் இவ்வாறான வீதி நாவகங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நாளை வாகனேரியில் இந்த வீதி நாடகங்கள் நடைபெறும் என நுண்கலைப்பீடத்தினர் தெரிவித்தனர்.

மக்கள் மத்தியில் உள்ள உள நலம் தொடர்பான சிக்கல்களை இனங்கண்டு அவர்கள் மூலமாகவே தீர்வுக்குட்படுத்துவது, உள நலம் தொடர்பான பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல நோக்கங்களின் அடிப்படையில் இந்த வீதி நாடகங்கள் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .