2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு. காத்தான்குடி பாடசாலையில் பல அபிவிருத்தித் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப், ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய வலயத்திற்குட்பட்ட காத்தான்குடிப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் செலவில் பல அபிவிருத்தித் திட்டங்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் சுமார் 11/2 கோடி ரூபாய் செலவில் 3 மாடி புதிய வகுப்பறைக் கட்டிடமொன்று திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், சுமார் 45 இலட்சம் ரூபாய் செலவில் இருமாடி வகுப்பறைக் கட்டிடத்தொகுதிக்கும், சுமார் 65 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் இன்று  வைபவ ரீதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.

கல்லூரி அதிபர் எ.எம்.றபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீத் , காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அல்ஹாஹ் மர்சூக் அகமட் லெப்பை நகரசபை உபநகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .