2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லைக்கற்கள் சேதம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லையைக் குறிக்கும் அடையாளக்கல் நேற்று இனந்தெரியாத நபர்களினால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு - கல்முனை வீதி இப்போது அதிவேக நெடுஞ்சாலையாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்து வரும் நிலையில் மட்டக்களப்பு நிறைவேற்று பொறியிலாளர் பிரிவு மற்றும் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் பிரிவு என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லைகளை பிரிக்கும் வகையில் பெரியநீலாவனையில் மேற்படி கல் நாட்டப்பட்டிருந்தது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நாட்டப்பட்ட இக் கல் நேற்று இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.தற்போது இதற்கு பதிலாக புதிய கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டததைச் சேர்ந்த பெரிய கல்லாறு கிராம மக்களுக்கும் இஅம்பாறை மாவட்டததைச் சேர்ந்த பெரியநீலாவனை கிராம மக்களுக்கும் இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை காணப்படுகின்றது. இதன் பின்னனியிலேயே குறித்த கல் சேதமாக்கப்டப்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X