2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண சபையினால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் அவர்களின் முயற்சியினால் காத்தான்குடி பிரதேச செயலளார் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்டின்  காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இக்குடும்பஙகளுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹில்மி ஹஸன் ஆகியோர் நிதியை வழங்கி வைத்தனர்.

குழாய்க் கிணறு அமைப்பதற்காகவும் தண்ணீர் தாங்கி மற்றும் மோட்டர் போன்றவைகளை அமைத்துக் கொள்வதற்காகவும் ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபா வீதம் 9 குடும்பங்களுக்கும் 225,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஆரம்ப வேலைகளை மேற்கொள்வதற்காக தலா ஒரு குடும்பத்திற்கு 12,500 ரூபா வீதம்  முதற்கட்ட நிதியே நேற்று வழங்கப்பட்டது.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .