2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தோணா கால்வாயை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Super User   / 2010 நவம்பர் 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தோணா கால்வாயை தோண்டி சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்ட 7 இலட்சம் ரூபா செலவில் இத்தோணாக் கால்வாயினை தோண்டும் வேலைதிட்டத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையொட்டி இன்று நடைபெற்ற இந்த வேலைதிட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் காத்தான்குடி நகர சபை பிரதி தலைவர் அஷ்பர் உட்பட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இத்தோணா கால்வாயை தோண்டி துப்பரவு செய்வதன் மூலம் ஆண்டு தோறும் மாரி காலத்தில்  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்படும் வெள்ள அனர்தத்தை தடுப்பதுடன் வெள்ளம் வடிந்தோட வழி ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .