2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மலேரியாவை ஒழிப்பதற்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

நாட்டிலிருந்து மலேரியாவை இல்லாது ஒழிப்பதற்கான உத்தேச வேலைத்திட்டம் என்ற தலைப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வொன்று மட்டக்களப்பு போக்கஸ் விருந்தினர் விடுதியில்இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வோதயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்;செயலமர்வில்,  மட்டக்களப்பு மாவட்ட மலேரியா தடுப்புப் பிரிவின் பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் பரீட் அகமட், சர்வோதய சமூக சுகாதாரப் பிரிவின் தேசிய செயற்திட்ட அதிகாரி  எஸ்.டி.குமாரகே ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர். சர்வோதயத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.ம.தனராஜ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்கள், பொலிஸ் இயற்கை சமூக தொடர்பாடல் பிரிவு அதிகாரிகள், மாவட்ட திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், பொறியியலாளர்கள் கலந்துகொண்டனர்.


இச்செயலமர்வில் மலேரியா தொற்று ஏற்டுவதற்கான சந்தர்ப்பங்கள், அதன் பரவல், கட்டுப்படுத்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.  எயிட்ஸ், சயரோகம், மலேரியா தடுப்புக்கான உலக நிதியம், மலேரியா தடை இயக்கம், சர்வோதயம் என்பன இணைந்து இந்தச் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X