2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விகாரை நிர்வாகத்தால் பாடசாலை மதில் உடைக்கப்பட்டதாக புகார்

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், ஸரீபா)

வாழைச்சேனை பிரைந்துரைச்சேனை ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாரை நிர்வாகத்தினால் தமது பாடசாலையின் 80 மீற்றர் நீளமான எல்லை மதில் சுவர் இன்று செவ்வாய்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக பிரைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க தலைவரும் அதிபருமாகியய எம்.எஸ்.சுபையிதீன் மற்றும் செயலாளர் எம்.யூ.ஏ.அலீம் ஆகியோரினால்  வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடசாலை 1970ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் வெற்றிடமாக இருந்த இடத்தை 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடமையாற்றிய பிரதேச செயலாளரிடம் கேட்டுக் கொண்டதிற்கிங்க பாடசாலை விளையாட்டு மைதானத்திற்காக அரச காணி என்று கூறி இதனை அவர் ஒப்படைத்திருந்தார்.

இதனை பிரைந்துரைச்சேனை சாதுலியா பாடசாலை மாணவர்களும் அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் தங்களது விளையாட்டு நிகழ்வுகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த விளையாட்டு மைதானத்திற்கான மதில் மற்றும் கிறவல் இடுவதற்கு 2000ஆம், 2001ஆம், 2002ஆம் காலப்பகுதியில் பிரதியமைச்சராக இருந்த முஹைதீன் அப்துல் காதர் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக அப்பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி இக்கானி விடயம் சம்பந்தமான பிணக்கினை தீர்த்து தரும் படி கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தார்.

இதேவேளை விகாரைக்கு ஏற்கனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிக்கான பத்திரத்தின் படி காணியை மதிப்பீடு செய்து விகாரைக்குரிய காணியை அடையாளமிடுமாறு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளருக்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸா அறிவித்துள்ளர்.

இதன் வேலைகள் பூர்த்தியடையும் முன்பே விகாரை நிர்வாகம் இன்று மாலை மைதானத்தை மூடி முள்கம்பி வேலி அமைத்ததுடன் எல்லை மதிலையும் உடைத்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாரையின் தேரர் தங்களது விகாரைக்கு சொந்தமான காணிப்யினை பாடசாலை நிர்வாகம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவருவதாகவும் அதனை மீட்டுத் தரும் படியும் கோரி கடந்த மாதம் விகாரைக்கு முன்பாகவுள்ள உன்னாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .