2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மீறப்பட்டுள்ளது: ஜவாஹீர் சாலி

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் வாழைச்சேனை அஷ்கர் வித்தியாலயத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதான   காணியினை வாழைச்சேனை புத்த ஜெயந்தி பௌத்த விகாரைக்கு சொந்தமென கூறி இன்று காலை முதல் வேலி போட்டு அடைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருப்பது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் தான் உடினடியாக கொண்டு வரப்போவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹீர் சாலி தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

வாழைச்சேனை அஷ்கர் வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானக்காணி வாழைச்சேனை சாதுலிய்யா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ளது.

இவ்விளையாட்டு மைதானத்தை நான் அறிந்த வரையில் பாடசாலை மாணவர்களும் விளையாட்டு கழக வீரர்களுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பாடசாலைக்கு சொந்தமான காணியென்பதற்கான  ஆவணங்களும் உண்டு.

இந்நிலையில் இவ்விளையாட்டு மைதானக்காணி வாழைச்சேனையிலுள்ள புத்த ஜெயந்தி பௌத்த விகாரைக்கு சொந்தமான காணியெனக் கூறி அதை பிடிப்பதற்கு அதன் விகாராதிபதி பல தடவைகள் முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நான் இது தொடர்பாக எடுத்துக் கூறியதையடுத்து இதை ஆராய்ந்து முடிவெடுக்கும் வரைக்கும் பொலிஸார் இதில் தலையிடக்கூடாதென அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இத் தீர்மானத்தையும் மீறி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் இவ்விளையாட்டு மைதானக்காணியினை வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் அவ்விகாரையிலுள்ள சிலர் தமக்குரிய காணியெனக் கூறி வேலி போட்டு அடைத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் அனைவரின் கவனத்திற்கும் தான் கொண்டு வர உள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹீர் சாலி மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .