2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் தாக்கப்பட்டது மீண்டும் காட்டுத்தர்பாரை ஏற்படுத்தும் அச்சம்

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு காட்டுத்தர்பார் ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சநிலை தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு உரையாற்றிய அவர்,

சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தினக்குரல் ஊடகவியலாளர் சசிகுமார் என்பவரை அவரது வீட்டுக்குச்சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுத்தர்பார்போன்ற செயற்பாட்டை மீண்டும் அனுமதிக்கமுடியாது.

இது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் ஆனந்த அல்வீஸ்,


இது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதுடன் குறித்த தாக்குதலுக்குள்ளானவரிடமும் நாங்கள் வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளோம்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் சரியான அடையாளங்கள் எவையும் அந்த ஊடகவியலாளரிடம் இருந்து கிடைக்கவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் ஏதாவது அடையாளங்களை உறுதிப்படுத்தினால் அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தும் செயற்பாடுகளை பொலிஸ் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .