2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'கொடிய யுத்தம் நிறைவடைந்த நிலையில் நாம் இப்போது எதிர்கொண்டுள்ளது அறிவு யுத்தம்'

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கொடிய யுத்தம் நிறைவு பெற்றுவிட்டது. இருப்பினும் நாம் இப்போது எதிர்கொண்டுள்ள யுத்தம் அறிவு யுத்தமாகும். அதற்கான படைவீரர்கள்  நம்மிடமுள்ள மாணவர்களாகும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஷாம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் கல்வியில் இணைப்பது தொடர்பாக யுனிசெப் ஏற்பாட்டில் மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர்  இதனைக் கூறினார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,


மாணவர்களை கண்டிப்பது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாக எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறானதாகும். ஆளுமை ரீதியான முறையில் பிள்ளைகளைக் கண்டிக்காமல் ஒரு மாணவன் சிறந்த நிலைக்கு வரமுடியாது.
தண்டித்தல் தொடர்பான சட்டத்தை இயற்றியவர்களும் தங்களுடைய ஆசிரியர்களிடம் அடிவாங்கியே இருப்பார்கள்.


புரிந்துணர்வின்மை காரணமாக ஏற்படுகின்ற சிக்கல்களால் சில ஆசிரியர்கள் மனக்குழப்பத்துக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.
இச்செயலமர்வில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X