2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸாரின் அசமந்த செயலுக்கு துரைரத்தினம் கண்டனம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு வவுணதீவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பொலிஸார் காட்டுப்பன்றி வேட்டையாடச் சென்றவேளை சிறுவன் ஒருவனுக்குத் துப்பாக்கிச் சூடு பட்டமைபோல் இனிமேல் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது எனக் கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் - மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரைக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வவணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அருகாமையில், 15.12.2010 அன்று மாலை 4 மணிக்கு வவுணதீவு பொலிஸில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் காட்டுப்பன்றி வேட்டையாடியபோது தவறி பாஸ்கரன் விஜயகுமார் என்கிற 13 வயது மாணவனுக்கு வெடி பட்டுள்ளது.

நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்விகற்கும் இம்மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, இப்பகுதியில் அடிக்கடி துவக்குச் சூட்டு சத்தம் கேட்பதாகவும், மக்கள் போய்ப்பார்க்குமிடத்து மிருகங்கள் வேட்டையாடப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இப்பிரதேசம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். பொதுமக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதி- மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .