2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பதுக்கி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் பொலிஸாரின் தலையீட்டையடுத்து மக்களுக்கு பங்கீட்டு

Super User   / 2011 ஜனவரி 16 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் நிவாரண பொருட்களை மக்களுக்கு பங்கீட்டு வழங்க வேண்டும் என தெரிவித்து மக்கள் பாடசாலையை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் பாடசாலையை சோதனை செய்தபோது சில நிவாரண பொருட்கள் அங்கிருப்பதாக தெரிவித்தனர்.

குறித்த பொருட்கள் மக்களுக்கு வழங்கவே அங்கு வைக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கிடையில் மக்கள் அவசரப்பட்டுவிட்டதாக பொறுப்பான கிராம உத்தியோகஸ்தர் தெரிவித்தார். குறித்த நிவாரண பொருட்களில் பருப்பு, சீனி, பால்மா போன்ற பொருட்கள் காணப்பட்டன.

சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .