2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தின் பின்னர் மட்டு. போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் அதிகரிப்பு

Super User   / 2011 ஜனவரி 17 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(கெலும் பண்டார)

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே. முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

பங்கசு தொற்று, காய்ச்சல், ஆஸ்துமா, இருமல், கண்நோய்கள், சுவாசப்பை நோய்கள் போன்றவற்றுக்காக சிகிச்சைபெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் டெய்லி மிரருக்கு நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

'கையிருப்பிலுள்ள மருந்துப்பொருட்களை கொண்டு நாம் நிலைமையை சமாளிக்க முடியும். எனினும் அவசர நிலைமைகளின்போது பயன்படுத்துவதற்காக பல்வேறு வகையான எதிர்ப்பு மருந்துகள் மேலும் தேவைப்படும்' என அவர் கூறினார்.

எனினும் வாந்திபேதி, வயிற்றோட்டம், கொலரா போன்ற நோய்களுக்கு அண்மையில் எவரும் சிகிச்சை பெறவில்லை என அவர தெரிவித்தார். தொற்று நோய்கள் சில காலத்திற்குப் பின்னர்தான் பரவும். இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இத்தகைய நோயாளிகள் வரக்கூடும் என டாக்டர் முருகானந்தன் மேலும் தெரிவித்தார்.

முறையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் டெங்கு நோய் பரவும் வாய்ப்பும் உள்ளதாக அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X