2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்கள ஊழியர்கள் அடங்கலாக 45 பேருக்கு விவசாய உபகரணங்கள்  மட்டக்களப்பிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனத்தினால் (யுனிடோ) வழங்கி வைக்கப்பட்டன.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய நிலையத்தில் வைத்து இவ் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சிறியரக விதைநெல் சுத்திகரிக்கும் இயந்திரங்கள், நான்கு சக்கர உழவு இயந்திர பொருத்தி நிலம் பண்படுத்தும் (கலப்பை) இயந்திரம், மேட்டுநில நாற்று நடுகை இயந்திரம், பொதிசெய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி, விவசாயத்திணைக்கள உதவிப்பணிப்பாளர், விவசாய அமைப்பின் தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .