2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசுடன் இணைவதன் மூலமே அபிவிருத்தி பாதையில் செல்ல முடியும்: மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் வாழ்ந்தவன் என்பதால் இப்பிரதேசம் குறித்து நன்கறிவதுடன், திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலயத்தை ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் இணைத்துக்கொள்ள எடுத்த  மீள்குடியேற்ற பிரதியமைச்சரின்  முயற்சிக்கு பாராட்டு நிகழ்வொன்றை பாடசாலை சமூகத்தினர் நடத்தினர்.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இப்பிரதேசம் யுத்தம்  மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. அந்த நிலைமை இன்று மாற்றம் பெற்று மக்கள் நிம்மதியுடன்  வாழும் நிலையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன்.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்துச் செல்ல வேண்டும். எமது பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை வைத்துள்ளேன். அந்த வகையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வீடுகளை திருத்தியமைப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சு மூலம் 50 மில்லியன் ரூபாவை  ஒதுக்கியுள்ளேன்.

தொடர்ந்து அபிவிருத்தியடையவேண்டுமானால் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செல்வதன் மூலமே அபிவிருத்தி பாதையில் செல்லமுடியும். அத்துடன், இந்த பாடசாலையின் பல்வேறு குறைகள் தொடர்பில் அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார். உடனடியாக ஆரம்பக் கட்டமாக 150,000 ரூபாவை எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கின்றேன். தொடர்ந்தும் இப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


விஸ்ணு வித்தியாலய அதிபர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் கலந்து கொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .