2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போரதீவு பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரவீந்திரன்)
போரதீவு பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் இன்று காலை முதல் நடைபெற்றுகொண்டுள்ளது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  அரியநேந்திரன், பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதரன், திணைகள அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் யானைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்குதல், மீள்குடியேறிய மக்களின் வீடில்லா பிரச்சிணை, குடிநீர் பிரச்சிணை, பாடசாலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, சிறுபோக வேளாண்மைக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொடுத்தல், மண்டூர் வைத்தியசாலையில் இடம்பெறும் நீர் பற்றாக்குரை, கிராமங்களுக்கு மின்சாரம் இல்லா பிரச்சிணை போன்றவற்றுக்கு தீர்வுகளை காண்பது தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

அடுத்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெறுவதற்கு இடையில் மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .