2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சவூதியில் சித்திரவதைக்குள்ளாகி வீடு திரும்பிய வாகரைப் பெண்

Super User   / 2011 ஜூன் 14 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர். அனுருத்தன்)


சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற வாகரையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு எஜமானால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கண்களின் பார்வையிழந்து உடலின் பல்வேறு உறுப்புக்கள் செயலிழந்து பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இவர்  கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வைத்து உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டார்.

மட்டக்களப்பு வாகரை மத்தி கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 31 வயதான  மனோகரன் பவானி என்பவரே இவ்வாறு அங்கவீனராக வீடு திரும்பியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தயாரான இவர், குடும்ப வறுமை காரனமாக  2003.06.01 ஆம் திகதி சவூதி அரேபியவின் தமாம் பிரதேசத்தின் பரிதா எனுமிடத்தில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சென்றார்.

சுமார் 2 வருடங்கள் கடந்தும் சம்பள பணம் தர மறுத்த எஜமானிடம் சம்பளப் பணம்கேட்டபோதே இந்த விபரீதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.       

தனக்கு கண்களில் இரசாயன பதார்த்தமொன்றை ஊற்றி கண்களை செயல் இழக்கச் செய்ததுடன் தன்னை கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்டு தீ வைத்ததாகவும் இதனால் தலைமுடி மற்றும் காதுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன் இரும்பு கம்பியினால் தலை மற்றும் ஏனைய இடங்களில் தாக்கியதுடன் இரும்பு கோலால் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட நிலமையை வெளியில் தெரிவிக்கவோ, கடிதம் மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மனோகரன் பவானி தெரிவித்தார்.

அங்குள்ள பொலிஸாரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமையை தெரிவித்தும் பலனின்றி மீண்டும் எஜமானிடம் கையளித்ததினால் சித்திரவதை மேலும் அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.

"நான் சவூதியில் முதலில் ஒரு வீட்டில் 27 நாட்கள் பணியாற்றினேன். அங்கு மற்றொரு  பணிப்பெண்ணுக்கு விழுந்த அடி உதைகளைப் பார்த்து நான்  மயங்கி விழுந்தேன். 

அதன்பின் அவ்வீட்டின் எஜமான் என்னை அடித்து வேலைவாய்ப்பு முகவரிடம் தன்னை ஒப்படைத்தார். அதன்பின் வேறொரு வீட்டிற்கு என்னை முகவர் அனுப்பினார். அங்குதான் இந்த கொடுமைகள் எனக்கு நடந்தன.

2 வருடங்களின்பின் அவர்கள் என்னை வீதியில் விட்டுவிட்டு சென்றார்கள். சவூதி பொலிஸார் என்னை இலங்கைத் தூதுரகத்தில் ஒப்படைத்தனர்.

இலங்கைத் தூதரகத்தின் மூலம் நான் இலங்கைக்கு அனுப்பப்பட்டு  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுப்பப்பட்டேன். பின்னர் வாழைச்சேனையை சேர்ந்த பெண் ஒருவர் மூலம் எனது வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வீட்டார் என்னை ஊருக்கு அழைத்து வந்தனர்' என பவானி தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட அவல நிலைமைக்கு காரணமான குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சவூதி அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள் கிழக்கு மாகண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் இப்போது தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் பவானியின் குடும்ப அங்கத்தவர் ஒருவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • jaliyuath Wednesday, 15 June 2011 07:36 PM

    உண்மைல யாரும் சவுதிக்கு வரக்கூடாது . ஏன் என்றால் இங்கு கடுமையான அநியாயம் நடக்குது.அல்லா தான் இவர்களுக்கு கூலி கொடுக்கணும்.

    Reply : 0       0

    saatiq Wednesday, 15 June 2011 08:20 PM

    சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் அப்போதுதான் சவுதி அரசாங்கம் இவ்வாறான கொடுமைகள் எதிர்காலத்தில் நடக்காமல் பாதுகாப்பு வழங்கும்.

    Reply : 0       0

    ajan Wednesday, 15 June 2011 11:14 PM

    இவை சவுதியில் சாதாரணம். லங்கா தூதரகம்
    இவைகளை பற்றி கவலைப்படுவது இல்லை.
    இது போல பல கொடுமைகள் நடக்கிறது,
    யார் கேட்க இருக்கிறது,

    Reply : 0       0

    rex Thursday, 16 June 2011 12:32 AM

    ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு பணம் வந்தால் போதும். புரியாணி சாப்பிட்டு கொண்டிருப்பர்கள்.

    Reply : 0       0

    irshad Thursday, 16 June 2011 02:45 AM

    ilankai arasangam ariwitha arikkayai innum niraiwedrap padathethe ithu ponra sampawengalukku karanam. muthlil penkelai welinadukku anppuwathai niruthawendum ithu korikkayalla yecharikkai. ithu penkalukku maddumalla, aankalukkum..................

    Reply : 0       0

    rayis Thursday, 16 June 2011 02:54 AM

    manitha mirukankal

    Reply : 0       0

    mam.fowz Thursday, 16 June 2011 03:15 AM

    எனது தாய்மார்கள் சகோதரிமார்கள். எந்தப் பெண்ணும் இந்த அரேபியா போக வேண்டாம் ?
    எமது நாட்டில் பிச்சை எடுத்தாலும் சரி போக வேண்டாம்.

    Reply : 0       0

    ajan Thursday, 16 June 2011 04:14 AM

    @mam..fowz :உண்மை.
    பிச்சை எடுத்தாலும் அரபு நாடுகளுக்கு, அதுவும் குறிப்பக சவுதிக்கு மட்டும் செல்ல வேண்டாம்.
    அங்கு இருக்கும் அதிகாரிகள் கேரளா பிரியாணி சாப்பிட்டு ஏப்பம் விட தான் லாயக்கு.

    Reply : 0       0

    sathik Thursday, 16 June 2011 06:59 PM

    please dont send any women to forign.

    Reply : 0       0

    Ruban Thursday, 16 June 2011 09:08 PM

    சகோதரிகளே அரபு நாட்டுக்கு போகாதிங்க .....

    Reply : 0       0

    xlntgson Thursday, 16 June 2011 09:26 PM

    mam.fauz இலங்கையில் பிச்சை எடுக்கவும் தடை இருக்கிறது!
    குவைத்தில் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் அடிமை வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் ஒரு பெண் தனது கன்னித்தன்மையை 3 மில்லியன் டாலர் கேட்டு ஏலம் விடும் போது இவர்கள் கொடுக்கும் தொகைக்கு சிறைக் கைதிகள் வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார். இலங்கை, பிலிப்பைன், வங்கதேசம் ஒன்றுபட்டு செயல் பட்டால் ஒழிய தீர்வில்லை என்றே நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் மிகக் குறைந்த தொகையில் அடிமை மாதிரி வேலைவாங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.

    Reply : 0       0

    M.A.A.Rasheed Friday, 17 June 2011 05:13 PM

    பெண்களை வேலைக்கு அனுப்பும் நிலை மாறவேண்டும். உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும்.அரசியல் காரணங்களுக்காக அரசு இந்த விடயத்தில் பா=ராமுகமாக இருக்கிறது. எமது எம்பசிகளுக்கு பவர் இல்லை. படிக்காத தகுதி இல்லாத அதிகாரிகளை எம்பசிக்கு அனுப்பினால் அவர்கள் எப்படி சேவை செய்வார்கள் ? தொழில் வாய்ப்பு பணியகம் தேவையான நிதி எம்பசிகளுக்கு கொடுப்பதும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .