2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்ணகி இலக்கிய விழா ஆய்வரங்கு

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் இரண்டாவது நாளாக இடம்பெறும் கண்ணகி இலக்கிய விழாவின் ஆய்வரங்கு, இளங்கோவடிகள் அரங்கில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. காலை 10.மணிமுதல் பிற்பகல் 1.00மணிவரை இடம்பெற்ற இந்த ஆய்வரங்கில் நான்கு ஆய்வாளர்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.

கண்ணகி இலக்கியங்களில் கிழக்கின் பண்பாடு என்ற தலைப்பில் ஆய்வுரையினை ஊடகவியலாளர் த.சகாதேவராசா நிகழ்த்தியதுடன் கண்ணகி நம்பிக்கைகள் ஓர் பொதுநோக்கு என்ற தலைப்பில் ஆய்வுரையினை சீ.கோபாலசிங்கமும் அந்நிய அறிஞர் தேடலில் கண்ணகி என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வி.க.தங்கேஸ்வரி மேற்கொண்டதுடன் கிழக்கிலங்கை சமூகத்தில் சிலப்பதிகாரம் கூறும் வாழ்வியல் என்ற தலைப்பில் ஆய்வுரையினை இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன தயாரிப்பாளர் எஸ்.மோசஸ் நிகழ்த்தினார்.

ஆய்வு மதீப்பீட்டாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களான பேராசிரியர் செ.யோகராசா மற்றும் திருமதி சாந்தி கேசவன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மதிப்பீட்டுரையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் தொகுப்புரையினை பேராசிரியர் சண்முகதாஸ் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X