2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணவிகளை காக்க முற்பட்ட காத்தான்குடி பொலிஸார் மீது பொதுமக்கள் கல்வீச்சு

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பார்க்கக்கூடாத திரைப்படமொன்றைப் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இரு மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொதுமக்களுடனான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள மேற்படி இரு மாணவிகளும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நேற்று முன்தினம் பிற்பகல் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு பிரதேசத்துக்கு பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற இரு மாணவிகள், அங்கு ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விரு மாணவிகளையும் பின்தொடர்ந்துள்ள இளைஞர்கள் சிலர், 'நீங்கள் ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்தீர்கள் தானே?' என்று கூறி அவ்விரு மாணவிகளையும் பலவந்தமாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றி, காத்தான்குடியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்த மேலும் சிலர், அம்மாணவிகளிடம் நீங்கள் ஆபாசத் திரைப்படம் பார்த்தீர்கள் தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் நீங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களைத் தாக்கியும் உள்ளனர்.

அதன்பின் காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலகக் கட்டிடத்துக்கு மேற்படி இரு மாணவிகளும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுமார் 350பேர் கொண்ட பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி சம்மேளனத்தின் பிரதிநிதியொருவரிடம் அவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டு அம்மாணவிகள் செய்த தவறுக்காக அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டுள்ளனர்.

மேலும், குறித்த மாணவியர் இவ்வாறானதொரு தவறை புரிந்துள்ளார்கள் என்றும் அனைவரும் வந்து அவர்களின் முகத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் அனைவருக்கும் மேற்படி நபர்களினால் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், பொதுமக்களை அங்கிருந்து அகற்றுமாறு பள்ளிவாசல் சம்மேளனத்திடம் கோரியுள்ளனர். இருப்பினும் அதனை தங்களால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் அதிகாரத்தில் அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறியுள்ளது.

இதனையடுத்து பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் உடன் நடவடிக்கை எடுத்த நான், பிரதேசத்தை அண்டிய அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் சுமார் 150 பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தேன்.

லத்திகளுடன் அவ்விடத்துக்கு பொலிஸார் குவிந்ததைப் பார்த்த பிரதேசவாசிகள் தங்களைத் தாக்கவே பொலிஸார் வந்துள்ளனர் என்று எண்ணி அவ்விடத்திலிருந்து ஓடியதுடன் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதலையும் நடத்தினர்.

இருப்பினும் இச்சம்பவத்தால் பொலிஸார் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரதேசத்தின் நிலைமையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து குறித்த பள்ளிவாசல் சம்மேளனத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவிகளின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (MM)


You May Also Like

  Comments - 0

  • Pasha Thursday, 23 June 2011 03:55 PM

    இப்படியான செயல்களுக்கு பகிரங்க தண்டனை விதிக்க சொல்வது ஏன் எனில் இவ்வாறான தவறை ஏனையோரும் செய்யக்கூடாது என்பதற்காக தான். காத்தான்குடி மக்கள் சரியான செயல் தான் செய்துள்ளார்கள். இது டியூஷன் போவது எண்டு சொல்லி அனாச்சரமான செயல் செய்யும் அனைவருக்கும் ஒரு படிப்பினை. இது ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

    Reply : 0       0

    hassan Sunday, 26 June 2011 08:13 AM

    பள்ளி மாணவிகளின் எதிகாலத்தை வீணடித்து விட்டார்கள். இவ்வாறு செய்தவர்கள் தனது மகள் அல்லது தனது சகோதரிக்கு நடந்தால் என்ன செய்த்ருப்பார்கள்

    Reply : 0       0

    Asaam PMGG Friday, 24 June 2011 04:01 PM

    இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்! ஒழிக அதர்!!

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Thursday, 23 June 2011 09:52 PM

    குற்றம் என்பது என்ன என்பதே சர்ச்சையாக இருக்கும் போது தண்டனைக்கு முந்தக்கூடாது! ஆணோ பெண்ணோ இருவர் தனித்திருந்ததற்காகவே பிரம்பால் அடிக்கும் சட்டம் கொடுமையானது; அவர்கள் இருவரும் உறவு கொண்டனர் என்பதற்கு கண் கண்ட சுவாதீனமான ஆண்கள் இருவர் அல்லது பெண்கள் நால்வர் சாட்சி தேவை. ஆபாசப் படம் பார்த்தல் என்னும் குற்றத்துக்கு என்ன தண்டனை என்பது தெளிவில்லை. இடத்துக்கு இடம் வேறுபடுகிறது தண்டனையே இல்லை என்பது போல்!
    இதைப் பார்த்து இவர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபடலாம் என்றே தடுக்கப்படுகிறது.

    Reply : 0       0

    Noushams Thursday, 23 June 2011 09:46 PM

    காத்தான்குடி பிள்ளைகள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை கண்டவர் யார் என விசாரித்து அவர்களிடம் உங்களுக்கு சொன்னது யார் நீங்களும் இந்த படம் பார்க்க போனீங்களா ? என்று பள்ளிவாசல் தலைவர் கேட்டிருக்க வேண்டும். தீர விசாரித்திருக்க வேண்டும் . ஒரு பக்க முடிவை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லக்கூடாது அல்லாஹ அனைத்தையும் அறிந்தவன் அந்த பிள்ளைகள் படம் பார்க்க வில்லை என்றால் நீங்கள் அந்த பிள்ளைகளின் துன்பத்தினால் நாசமப்போகிடுவீங்க. ஊர்ல இருந்த கேட்ட பேர் எல்லாம் உங்களுக்கும் உங்கட பிள்ளைகளுக்கும் வரும்.

    Reply : 0       0

    Nousham Thursday, 23 June 2011 09:46 PM

    காத்தான்குடி பிள்ளைகள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை கண்டவர் யார் என விசாரித்து அவர்களிடம் உங்களுக்கு சொன்னது யார்? நீங்களும் இந்த படம் பார்க்க போனீங்களா என்று கேட்டிருக்க வேண்டும். தீர விசாரித்திருக்க வேண்டும் . ஒரு பக்க முடிவை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லக்கூடாது அல்லாஹ அனைத்தையும் அறிந்தவன்.

    Reply : 0       0

    Nanpan Thursday, 23 June 2011 08:24 PM

    ஒரு மானபங்கம் ஏற்படுத்தும் விடயம் தொடர்பாக ஆதாரம் இன்றியோ ஆதாரதுடனோ பகிரங்க படுத்துவது நல்லதல்ல, அவர்களுக்கு புத்திமதி கூறி திருந்துவதற்கு சந்தர்பம் கொடுக்க வேண்டும்

    Reply : 0       0

    vaasahan Thursday, 23 June 2011 07:16 PM

    மரியா மக்தலேனாவை கல்லெறிந்து கொலை செய்ய சமூகம் திரளகண்ட இயேசு ஒருபாவமும் செய்யாதவர் முதலாவது கல்லை எடுத்து எரியக்கடவது என்று சொன்னாராம். இப்படியா சொன்னாய் என்ற யூத சமூகம் பின்னாளில் இயேசுவுக்கும் மரியாவுக்கும் காதல், அதன்மூலம் அவளுக்கு பிள்ளையும் உள்ளதாக கதைகட்ட அந்தக்கருவை சினிமாவாக (da வின்சி கோட்) ஆக்கி சர்வதேசம் ஒருமிக்கப் புகழ்ந்த உலகம் ஐயா இது. நீதிக்காக யாரும் வாய் திறக்கக்கூடாது.

    Reply : 0       0

    Pasha Thursday, 23 June 2011 06:55 PM

    தங்கைய அக்காவா என்பது அல்ல இங்கு பிரச்சினை. இஸ்லாமிய தண்டனைகள் பஹிரங்கமாக விதிக்கப்பட வேண்டும் என்பதன் நோக்கம் அதை கண்டு மற்றவர்கள் படிப்பினை அடைய வேண்டும் என்பதத்ககவே. யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இங்கு பலர் தண்டனை வழங்க கூடாது என்றும் சிலர் தவறுகள் மூடி மறுக்கப்படல் வேண்டும் எனவும் கருதுகின்றனர்.

    Reply : 0       0

    Anban Thursday, 23 June 2011 06:34 PM

    தவறுகளை கண்டிப்பதற்கு இது முறையல்ல அன்பர்களே. மனித நேயப் பண்புடன் சீர்திருத்த முன்வாருங்கள்.

    Reply : 0       0

    fath Thursday, 23 June 2011 05:54 PM

    மிஸ்டர் பாஷா உனது தங்கை இப்படி நடந்தால் நீர் இவ்வாறுதான் செய்வீரோ?

    Reply : 0       0

    sarjun Thursday, 23 June 2011 05:31 PM

    பெண்கள் விடயத்தில் அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக சில தீய நடத்தைகள் இருப்பின் அதனை மூடி மறைக்க சொல்லி இருகிறாங்க. அத விட்டுட்டு அந்த இளம் பெண்களின் வாழ்கையை நாசமாக்கி விட்டார்கள். ஆண்கள் இரவிலும் பகலிலும், போனிலும், படம் பார்கிறார்கள் இதை எந்த சந்தியில் வைத்து சொல்லுவது என்று அவர்களிடம் நான் கேட்கிறேன்.

    Reply : 0       0

    Muneer Thursday, 23 June 2011 05:27 PM

    இப்படி நடந்துகொள்ள யார் இவர்களுக்கு அனுமதி அளித்தது? இந்த 300 பேர் கொண்ட கூட்டத்தில் , அப்படியான திரைப்படங்களை பார்க்காதவர் ஒருவர் சரி இருப்பாரா? இது போன்ற குறைகளை மறைத்து அவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டிய சமுதாயம் இப்படி ஈனச்செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

    Reply : 0       0

    Dr. I.M. Javahir Thursday, 23 June 2011 05:02 PM

    இந்தச்செய்தியின் பிரகாரம், தவறு மாணவிகளின் பேரில் இல்லை. யாரோ இளைஞர்கள் சிலராலேயே விடயம் ஏன் ஜோடிக்கப்பட்டிருக்கக்கூடாது? கண்மூடித்தனமான முடிவுகளால்தான் பிரச்சினைகள் யாவும் முளைக்கின்றன. சமுதாயத்தை வழிநடத்துவோருக்கு அறிவு எங்கே போனது?

    Reply : 0       0

    jaleel nintavur Thursday, 23 June 2011 04:57 PM

    மாணவிகள் செய்தது தவறுதான். இருந்தும் பெண்களை தண்டிக்க கூடிய விதிமுறை உண்டு. அதன் பிரகாரம் அவர்கள் பெற்றோர் மூலமாக தண்டித்து இருக்கலாம்.மானவிகளை அவமானப்படுத்தும் முறையில் தண்டிதவர்களும் தண்டிக்க பட வேண்டும் .

    Reply : 0       0

    Ibnu Wednesday, 22 June 2011 10:24 PM

    தவறுகள் மன்னிக்கப்பட்டு மறைக்கைப்பட வேண்டுமே அந்த மாணவிகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவே இல்லையா??
    இத்தனை அதிகாரம் தந்தது யார்???
    நிச்சயம் இந்த அசம்பாவிதம் அநீதியானது, இறைவன் எல்லோரையும் மன்னிக்க வேண்டும்.

    Reply : 0       0

    Sahotharan Thursday, 23 June 2011 03:31 PM

    இஸ்லாமிய ரீதியில் குற்றங்கள் செய்தால் நிரூபிப்பதற்கான முறை இருக்கின்றது .இருப்பினும் இவை பரகசியமாகவே செய்யப்படவேண்டும்
    இரு இளைஞ்சர்கள் பெண் பிள்ளைகளை பிடித்து மோட்டார் சைக்கிளில் பிடித்து வருவது எப்படி?
    யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது ? அநியாயமாக மாணவிகளின் மானத்தை பறக்கவிட்டீர்கள் ? இவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கசென்றால் என்ன செய்வீர்கள் ?

    Reply : 0       0

    உண்மையாளன் Thursday, 23 June 2011 03:31 PM

    பாடசாலை மாணவர்களா இருக்கின்ற இவர்கள் செய்த தவறு என தெரியாது இவர்கள் இருவரும் நடந்திருக்கிறார்கள் . அதற்கு சிறுவர் நன் நடத்தை அதிகாரிகளின் மூலமே விசாரிக்க முடியும் அவ்வாறு விசாரித்து தவறு உணர்ந்து மாணவர்களுக்கு தண்டணையாக பெற்று திருத்த முயற்சிதிருக்கலாம், அதணை பள்ளிவாசலில் பொது இடமாக இருக்கின்றமையால் அது ஊர் ரீதியான பிளவு ஏற்பட்டு பொலிஸஸார் பாதுகாப்பிற்கு வந்தபோது பொதுமக்கள் கல்லெறிந்த செயல் தவறை வெளிக்காட்டி விட்டது.

    Reply : 0       0

    vaasahan Thursday, 23 June 2011 02:45 PM

    இப்பபடி ஒரு சம்பவம் நடந்திருப்பின் அதற்கு வேறுவழிகள் உள்ளன. முதலில் தண்டிக்க முயன்றவர்களிடம் இருக்கும் மனநோய்க்கு சரியான மருந்தை சட்டத்தின் காவலர்கள் வழங்க சம்மேளனம் உதவி, இளம் பெண்களைப் பாதுகாக்காவிடின் இத்தகைய மனநோயாளிகள் மேலும் பெருகி தங்களின் வலைக்குள் சிக்காதோரை இப்படித்த ண்டிக்க தலைப்பட்டு விடுவர். தவறு செய்யப்பட்டிருந்தாலும் இவர்கள் இளம் பெண்களின் மானத்தை தங்கள் கதாநாயக வேட்கைக்கு பலியிட சமூகம் அனுமதிக்கக்கூடாது. நல்லாட்சிக்கான மக்களவையில் இது பார்த்திருக்கக்கூடாத அவலம்.

    Reply : 0       0

    Kavi Thursday, 23 June 2011 10:32 AM

    முதலில் இவர்கள் கூறுவது உண்மைதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இவ் மாணவிகளின் வாழ்க்கையை வீணாக சீரழித்த இவர்களை இறைவன்தான் தண்டிக்க வேண்டும்.

    Reply : 0       0

    Naleem Thursday, 23 June 2011 06:22 AM

    மற்றவர்களின் மானத்தை காக்கவே இஸ்லாம் சொல்லியிருக்கிறது.இந்த விடயத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளத்தினர் நடந்தவிதம் மிகவும் வெட்கப்படவேண்டிய விடயமாகும். அவர்கள் விபச்சாரம் புரியவில்லையே. அப்படியிருந்தால்கூட தகுந்த சாட்சியங்கள் இருந்தால் மட்டுமே தண்டனை வழங்க முடியும். நன்றாக சிந்தியுங்கள். அந்த மாணவிகளை மானபங்கப்படுத்திய நாசகாரர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை விரைவில் கிடைக்கும்.

    Reply : 0       0

    அதீக் Thursday, 23 June 2011 04:46 AM

    பிழையான செயற்பாட்டினால் மாணவிகளின் எதிர்காலத்தை புதைத்துவிட்டார்கள். மாணவிகளை தன்டிக்க எடுத்த நடவடிக்கை தவறானது. குறித்த மாணவிகளின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியிருந்தால் போதும்.

    Reply : 0       0

    azzuhoor Thursday, 23 June 2011 04:10 AM

    தங்களை பெரிய மனிதர்கள் என்று காட்டும் சிலரின் முட்டாள்தனமான வேலை.

    Reply : 0       0

    jameel Thursday, 23 June 2011 01:35 AM

    இது ஒரு அருவருக்க தக்க செயல் அவர்க ஆபாச படம் பார்த்தார்கள் என்பது எந்தவகையில் உண்மை ஆகும்?? அப்படி இருந்தாலும் அதை பள்ளிவாசம் தலைமை விசாரித்து தனது பெற்றோர்களிடம் ஒப்படைத்து திருத்துவதற்கான நடவடிக்கை எடுத்து இருக்கலாம் இது படித்து கல்விகற்ற கல்மான்கள் கூடி இப்படி அவமானப்படுத்துவது தண்டிக்கதக்கது மாணவர்களின் எதிர்காலத்தையும் பார்த்து இருக்க வேண்டும் அவர்களை பிடித்தவர்கள் மட்டும் எந்த வகையில் நல்லவர்கள் ஆகமுடியும் அவர்களின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் தண்டிக்கவேண்டியது பள்ளிவாசல் தலைமையை தான்

    Reply : 0       0

    Alga Thursday, 23 June 2011 01:28 AM

    adaingappa! UK la class la enna ennamo nadakkuthu atha kelunka paapam.

    Reply : 0       0

    Abu Faheem Thursday, 23 June 2011 01:21 AM

    அம்மாணவிகள் செய்தது தவறே இருப்பினும் அவர்களின் பெற்றோர்களிடம் விஷத்தை சொல்லி அவர்களை கண்டித்திருக்கலாம்? அவர்களின் எதிர்காலம் கருதி இதனை வெளிப்படுத்தாமல் தண்டிதிருக்கலாம். சிறிலங்காவில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களே என மிகவும் வருத்தமாக உள்ளது அல்லா நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்.

    Reply : 0       0

    malwanai maindan Thursday, 23 June 2011 12:44 AM

    மனிதன் என்ற வகையில் தவறுகள் நிச்சயம் நடக்கும்.
    ஆனால் அதை இரகசியமாக விசாரிப்பதே மனிதப்பன்பு.
    அதனை விட்டு விட்டு அதை பகிரங்கப்படுதுவதில் என்ன நியாயம்?

    (மல்வானை மைந்தன்)

    Reply : 0       0

    ris Thursday, 23 June 2011 12:16 AM

    கண்டிப்பாக முதலில் அவர்களுடைய பெற்றோரிடம்தான் தெரிவிக்க வேண்டும். இது தவறுதான், அப்படி நடந்திருந்தால் அதனை அவர்கள் செய்த தவறினை நிருபித்திருக்க வேண்டும். , ஆண்கள் இதனை செய்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது.

    Reply : 0       0

    Mohd rizvi -Qatar Wednesday, 22 June 2011 11:36 PM

    தவறுகள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் அம்மாணவர்களின் எதிர்கால கல்விக்கும் வாழ்வுக்கும் யார் பொறுப்பு தாரிகள்? கொஞ்சம் சிந்தியுங்கள்.

    Reply : 0       0

    Silmu Wednesday, 22 June 2011 11:09 PM

    குறித்த மாணவிகளை எச்சரித்து அவர்களது நடத்தை பற்றி அவர்களது பெற்றோர்களை அழைத்து எடுத்துக் கூறி இருக்கலாம். பெற்றோர்கள் தமது பிள்ளைகளைத் தண்டித்திருப்பார்கள். அதைவிடுத்து இவ்வாறு நூற்றுக்கணக்கான மக்களை வரவழைத்து அவர்கள் முன் மாணவிகளை பகிரங்கப்படுத்திய விதம் நல்லதல்ல. அவர்கள் மாணவிகள். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். நடந்தது தவறுதான். அதைத் திருத்த வழிகள் இல்லாமலில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X