2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இருவேறு வாகன விபத்தில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 18 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், எம்.சுக்ரி, ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை   இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே ஒருவர் பலியானார்.

பண்டாரியாவெளியை சேர்ந்த கருணா (வயது 30) என்ற குடும்பஸ்த்தரே  இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.

மண்முனைக்கு செல்லும் ஒல்லிக்குளம் வீதியிலுள்ள சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், கூலித்தொழிலாளியான் மேற்படி நபர் காத்தான்குடியில் வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுவிட்டு  தனது முதலாளியின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் சந்திப்பகுதியில் வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறினர்.  

பலியானவரின் கழுத்துப்பகுதி மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் நசியுண்ட நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு அவ்விடத்தில் நின்ற பொதுமக்களால்  கொண்டுசெல்லப்பட்டபோது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை,  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

படுகாயமடைந்தவர்கள்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள்  காத்தான்குடியை சேர்ந்தவர்கள் ஆவார்.

இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .