2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்களாலும் மேசன் தொழில் செய்ய முடியும்: இந்துராணி, இந்துமதி

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆண்களுக்கு மட்டுமே மேசன் தொழில் செய்ய முடியும் என்று எண்ணியிருந்தவர்கள் மத்தியில் பெண்களும் அத்தொழிலை செய்ய முடியுமென நிரூபித்து வாழ்ந்து வருவது சிறப்பாக இருக்கின்றது என இந்துராணி - இந்துமதி சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜேர்மன் அரசாங்கத்தின் 421 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தின் பயனால் இன்று தலைநிமிர்ந்து நிற்கும் சகோதரிகள் போன்று பலர் பயனடைந்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் மர்ஜா – அங்கு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தார். ஜேர்மன் நிதியுதவியில் இயங்குகின்ற கைத்தொழில் பயிற்சி பட்டறையில் பயில்கின்ற பெண்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

அங்கு மேசன் தொழிலினை பயின்று வருகின்ற இந்துராணி தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்துகொள்கையில்...

'என்னுடைய தந்தை தொழிலுக்கு போகமுடியாமல் வருத்தத்தில் வீழ்ந்த நிலையில் குடும்ப சுமையினை சுமக்கின்ற பொறுப்பு எமக்குக் கிடைத்தது. நானும் எனது சகோதரியும் மேசன் தொழில் செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ஆண்கள் செய்கின்ற வேலையினை எப்படி பெண்கள் செய்ய முடியும் என கிண்டல் பண்ணினார்கள். ஆனாலும் சாதிக்க துடித்தோம். ஆளுக்கு 2500 ரூபாய் வீதம் மாதம் உழைக்கத் தொடங்கினோம். ஆனால் இது போதுமானதாக இருக்கவில்லை.

இந்நிலையில்தான் ஜேர்மன் நிதியுதவியில் இந்த பயிற்சிப்பட்டறையில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு 3 மாதங்கள் பயின்றோம். ஒருநாளைக்கு 100 ரூபாய் படிக்கின்ற காலத்திலும் எமக்குத் தந்தார்கள். அது நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்திற்கு இணையாகவிருந்தது. படிப்பினை முறையாக தொடர்ந்து வருகின்றமையால் இப்போது 6000 ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது.

நாங்கள் கற்றவற்றை இங்கு கற்க வருகின்ற பெண்களுக்கும் கற்றுக் கொடுக்க ஆசைப்படுகின்றோம். உழைக்கத் துடிக்கும் பெண்களுக்கு நாங்கள் வழிகாட்டியாய் இருப்போம்...' என்று குறிப்பிட்டார்.

ஜேர்மன் நிதியுதவியில் இயங்கும் இந்த கைத்தொழில் பயிற்றுவிப்பு நிலையத்தில் யோகராணி என்ற பெண் விரிவுரையாளர் மேசன் தொழில் சம்பந்தப்பட்ட அடிப்படை கற்கைநெறிகளை கற்பித்து வருகின்றார். பெண்களுக்கு தைரியமூட்டும் விதத்தில் அவரது சேவை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • ruthra Wednesday, 14 September 2011 05:46 PM

    உங்களை போன்ற முன்மாதிரியானவர்கள் இன்றைய பெண்களுக்கு கட்டாயம் தேவை. உங்களது வளர்ச்சிக்கு வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0

    Hot water Wednesday, 14 September 2011 05:51 PM

    ஆண்களுக்குரியது எனக்கூறப்படும் பல துறைகளில்கூட ஆண்களைவிடவும் சிறப்பாக செயற்படுகிறார்கள். பல நாடுகளில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம்.

    Reply : 0       0

    karan Thursday, 15 September 2011 07:55 PM

    சகோதரிமார்களே வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Chamber of Construction Industry, Regional Office , Batticaloa Thursday, 15 September 2011 08:27 PM

    The article seems to have forgotten to state that the training is being conducted by the Chamber of Construction Industry of Sri Lanka. The project was initiated by the chamber to increase the skill amongst construction workers in response to the ILO findings showing dearth of skill craftsmen in the district. The Chamber is conducting courses in Masonry, Carpentry, Plumbing , House Wiring and Aluminum Fabrication in Seven Centres.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .