2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கற்றல் நடவடிக்கைக்காக மீளிணைக்கப்பட்ட மாணவர்கள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள பணிச்சங்கேணி திருமகள் பாடசாலைக்கு கற்றல் நடவடிக்கைக்கு செல்லாமல் இருந்த 18 மாணவர்களை  வாகரை பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்ன இணைக்கும் நடவடிக்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஈடுப்பாட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத  2,4,8,9,10ஆம் வகுப்பு மாணவர்களே இவ்வாறு பாடசாலையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.
    
இவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இவர்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அப்பகுதி சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்ன உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை மேலும்  6 மாணவர்கள் இளம் வயதில் திருமணம் செய்துக்கொண்டதனால் அவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்க முடியாமல் போய்விட்டதாக இதன்போது அவர் தெரிவித்தார்.

இளம் வயதில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பபோவதாக  பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கூடியளவு கவனம் செலுத்தவேண்டும். வறுமையை காரணம் காட்டி சிறுவயதிலே சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும்.

அவ்வாறு மீறி செல்லுவார்களேயானால் குறித்த பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வாகரை பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்ன  மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அதிபர் சி. முருகவேலிடம் மாணவர்களை பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0

  • athiran Sunday, 25 September 2011 01:16 AM

    ithu paaraatta thakka vidayam. vaalththukkal.. ungal pani thodaraddum..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X