2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உள்ளூர் பாலுற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹூஸைன்,சுக்ரி)
உள்ளூர் பாலுற்பத்தியையும் பால் உணவுப்  பொருட்களையும் ஊக்குவிக்கும் தேசிய கொள்கைக்கு அமைவான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட தாவரவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரீ. ஜெயசிங்கம் தெரிவித்தார்.

 

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் நான்கு நாட்கள் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இக்கருத்தரங்கை  மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அருமைநாயகம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இக்கருத்தரங்கில் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு மட்டங்களிலுள்ளோரும் பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான கலாநிதி ரீ. ஜெயசிங்கம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ளூர்  பாலுற்பத்தி நுகர்வில் முப்பது சதவீதத்தையே ஈடுசெய்கிறது. உள்ளூர்   பால் மற்றும் பாலுணவுப் பொருள்களின் நுகர்வில் அக்கறை காட்டுவதோடு உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது எமது அபிவிருத்தியை துரிதப்படுத்தும் என்று கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட தாவரவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஜூகாஸ் அக்ரோ டைரீஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி ரீ.ஜெயசிங்கம் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .