2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விசேட தேவையுடைய பிள்ளைகளினால் செய்யப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா, ரி.லோஹித்))  
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் புகலிடம் நிறுவனத்தின் விசேட தேவையுடைய பிள்ளைகளினால் செய்யப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்கான எட்டு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையங்களில் 508 விசேட தேவையுடையவர்கள் தங்கியிருந்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் இங்கு கண்காட்சிகளுக்கும் விற்பனைகளுக்கும் வைக்கப்பட்டுள்ளன. இதன்போது விசேட தேவையுடைய பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .