2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'நீதியை சமமாக அணுகும்' கருத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் யூ.என்.டி.பி. நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் 'நீதியை சமமாக அணுகும்' கருத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணிவரை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், மாவட்ட மேலதிக பதிவாளர் நாயகம் கே.திருவருள், ஆட்பதிவுத் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜம்பிகா கனேரு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், யூ.என்.டி.பி.திட்ட உத்தியோகத்தர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி, ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .