2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திவிநெகும திட்டத்தின் கீழ் ஏறாவூர் பற்றில் கோழிக்குஞ்சுகள் வழங்கல்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

திவநெகும திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேசக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கோழி வளர்ப்புக்கான ஒரு மாதக் குஞ்சுகள் 790 இன்று வியாழக்கிழமை பகல் வழங்கப்பட்டன.

79 பயனாளிகளுக்கான கோழிக்குஞ்சுகளை வந்தாறுமூலை கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடை உற்பத்திச் சுகாதாரத்திணைக்கள அலுவலகத்தில் வைத்து கால்நடை வைத்திய உத்தியோகத்தர் எஸ்.பி.தேவராஜா, சமர்த்தி உத்தியோகத்தர் கே.செல்வராஜா, வி.புஸ்பலதா, ஏறாவூர் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உதவியாளர்களான திருமதி சீ.ஜீவராணி, எம்.ஏ.சாபிரா ஆகியோர் வழங்கிவைத்தனர்.

பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 10 குஞ்சுகள் வீதம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான கோழிக் கூடுகளின் பெறுமதியில் அரைவாசித் தொகையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் 135 பயனாளிகளுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் கால்நடை வைத்திய உத்தியோகத்தர் எஸ்.பி.தேவராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .