2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'ஈராக் கிராமம்' ஆகிறது 'சதாம் ஹூஸைன்' கிராமம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் 'சதாம் ஹூஸைன்' கிராமம் என அழைக்கப்பட்ட கிராமம் - 'ஈராக் கிராமம்' என பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஏறாவூர்ப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனை நினைவுபடுத்தும் இக் கிராமத்தின் இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக, ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டது. அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த மர்ஹூம் அஹமட் பரீட் மீரா லெப்பை ஈராக்குக்கு விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பிரகாரம் ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.
பள்ளிவாயல், மத்தரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கி இக்கிராமம் அமைக்கப்பட்டு 'சதாம் ஹூஸைன்' கிராமம் என்ற பெயரில் 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் அக்கிராமத்திற்கு 'ஈராக் கிராமம்' என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் தொடர்பாக எடுத்துள்ள இந்த தீர்மானம் பற்றி அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயல் தலைவரான முகம்மட் லெப்பை அப்துல் லத்தீப் தெரிவிக்கையில்...

'ஏற்கனவே 1990ஆம் ஆண்டுவரை தமது கிராமத்தின் பள்ளிவாயல் மற்றும் மத்தரஸாவுக்கு மாதாந்தம் ஈராக் அரசாங்கம் உதவிவந்த தொகை- அந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நிதி நெருக்கடியை நாம் எதிர்நோக்கினோம். அண்மையில் எமது கிராமத்திற்கு வந்த ஈராக் குழுவிடம் தொடர்ந்தும் அந்த உதவிகள் வழங்குவது தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது - இந்த அரசாங்கம் சதாம் ஹூஸைன் கிராமம் என்னும் பெயரில் கிராமம் இருப்பதை விரும்பாது.

இந்நிலையில் தற்போதைய ஈராக் அரசாங்கத்திடம் உதவிகளைப்பெற வேண்டுமானால் கிராமத்தின் பெயர் மாற்றப்படவேண்டுமன்ற யோசனையை முன்வைத்தனர். இதன் காரணமாகவே 'ஈராக் கிராமம்' என பெயர்மாற்றம் செய்ய தீமானித்துள்ளோம்.
இந்த பெயர்மாற்றம் தொடர்பாக எவ்வித வற்புறுத்தல்களும் அழுத்தங்களும் இல்லை. உதவி செய்தவர்களையும் நினைக்கவேண்டும், உதவ முன்வருபவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • தம்பி Saturday, 26 November 2011 12:57 AM

    அசிங்கமான நடவடிக்கை. காசுக்காக - எதையும் செய்யலாம் என்கிற அற்ப குணத்தைக் காட்டுகிறது இந்த - பெயர் மாற்றல் நடவடிக்கை!

    ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்த சதாம் ஹுசைனை மறந்து வி்ட்டு, இனி - பிச்சை போடப் போகின்றவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை நன்றியற்ற தன்மையைக் காட்டுகிறது!

    Reply : 0       0

    ஏ.பி.சாஜஹான் Saturday, 26 November 2011 02:19 AM

    மாமனிதா் உருவாக்கித்தந்த கிராமத்திற்கு இப்படி ஒரு கதியா?

    Reply : 0       0

    sakeena Saturday, 26 November 2011 02:58 AM

    இது கேவலமா தெரியவில்லையா...மற்றது தற்போது இராக்கை ஆள்வது சீயாக்கள்....

    Reply : 0       0

    meenavan Saturday, 26 November 2011 03:06 AM

    அவமானம். காசுக்காக சோரம் போகும் நிலை. பணம் எனது உம்மத்துக்கு சோதனை என்ற நபி மொழி பொய்யாகுமா?

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 26 November 2011 03:33 AM

    நன்றி மறப்பது நன்றன்று. ஒரு உதாரணம்
    ஒருவரின் தந்தை இருக்கும் போது பெயருக்கு பக்கத்தில் தந்தை பெயர் வந்தது, தந்தை மரணித்ததும் தாயின் பெயரையா பக்கத்தில் போடுவது?
    யாருப்பா இந்த ஐடியா சொன்னா? சதாம் செய்த உதவிக்காக அந்த மனிதரின் பெயரில் 32 வருடம் இருந்த கிராமத்தை பெயர் மாற்றுவது ஏன்? என்ன காரணம்? பணத்தாசையாங்க........... உருப்படுங்க.

    Reply : 0       0

    mahroof Saturday, 26 November 2011 04:02 AM

    பச்சோந்திகள் போல் காலத்துக்கு காலம் பெயரை மாற்றலாமா? தீர்மானத்தை உடன் வாபஸ் பெற வேண்டும்.

    Reply : 0       0

    Fasly Saturday, 26 November 2011 05:08 AM

    தீர்மானத்தை வாபஸ் பெறுங்கள். இது அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்றமை ஆகும். அமெரிக்க பொம்மை ஆட்சியை அங்கீகரித்தமை போல் ஆகும். சதாம் நல்லவரோ கெட்டவரோ. . ஒரு கிராமத்தை உருவாக்க/கட்டியெழுப்ப முன்வந்த ஒருவரை சில்லறை உதவிக்கு மறந்து விடுவது இஸ்லாமிய பண்பல்ல.

    Reply : 0       0

    riyas Saturday, 26 November 2011 06:04 AM

    ஏன் இந்த நிலை

    Reply : 0       0

    azhar Saturday, 26 November 2011 08:03 AM

    முதலில் ஆங்கிலத்தில் ஈராக் கிராமம் என்பதை சரியான முறையில் எழுதுங்கள் .village

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Saturday, 26 November 2011 08:15 AM

    என்னப்பா நடக்குது இங்கே

    Reply : 0       0

    Miyad Saturday, 26 November 2011 03:56 PM

    நிச்சயமாக கண்டிக்க வேண்டிய விடயம்.

    Reply : 0       0

    Nanpan Saturday, 26 November 2011 07:14 PM

    100 குடும்பங்களின் அடிப்படை தேவை ஒன்றை பூர்த்தி செய்த மனிதனை அற்ப காசுக்காக மறந்திட்டாங்களே. இது கேவலமாக உள்ளது. முப்பது வருடங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .