2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி குட்வின்சந்தி கடைகளை உடைக்க நீதிமன்றம் இடைக்கால தடை

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி குட்வின் சந்தியிலுள்ள மெத்தைப் பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை காத்தான்குடி நகர சபை உடைக்க முடியாது என மட்டக்களப்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் (சிவில்) இன்று திங்கட்கிழமை இடைக்கால தடை உத்தரவை வழங்கியது.

அத்துடன் காத்தான்குடி நகர சபை குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி போன்ற  நிர்மாண வேலைகளை மேற்கொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டது.

காத்தான்குடி குட்வின் சந்தியிலுள்ள காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை காத்தான்குடி நகர சபை உடைத்தமைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பள்ளிவாசல் நிருவாகத்தினர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, மட்டக்களப்பு மேன் முறையீட்டு நீதிபதி (சிவில்) சசி மகேந்திரன் குறித்த இடைக்கால தடை உத்தரவினை வழங்கினார்.

எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி காத்தான்குடி நகர சபை இது தொடர்பிலான ஆட்சேபனை மனுவினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிடடார்.

காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசல் சார்பாக சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன் மற்றும் ஏ.முகம்மட் றூபி ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த சனிக்கிழமை காத்தான்குடி நகர சபையினால் குட்வின் சந்தியிலுள்ள மெத்தைப் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஒன்பது கடைகள் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .