2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

சிறுவர் துஷ்;பிரயோகத்தை தடுப்பது தொடர்பிலும் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பிலுமான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் கடமையாற்றும் பொலிஸாருக்கு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்னவின் ஆலோசனையின் கீழ், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிலையம் இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

இச்செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் பதிவாளருமான ஜனாப்.ஏ.ஆர்.எல்.அமான், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் சோமாவதி சுப்ரமணியம், நிலையத்தின் மத்திய முகாமையாளர் எஸ்.சுகந்தினி, உளவளத்துணை ஆலோசகர் திருமதி நிசாந்தினி அன்டனோ நிரோஷன், மட்டக்களப்பு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக உள்ளக ஆய்வாளர் ஆர்.எம்.ஜி.ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், அவர்களை சட்டத்தின் மூலம் பாதுகாத்தல் தொடர்பில் வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .