2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது நோக்கமாகும்'

Kogilavani   / 2012 நவம்பர் 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                               (எம்.சுக்ரி)
'இன, மத பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது நோக்கமாகும்' என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் 70 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சைக் கட்டிடத்தை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்ய என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கதிரவெளி, ஈச்சிலம்பற்று போன்ற பிரதேசங்களின் வைத்தியசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

இங்குள்ள வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ளவுள்ளேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் திருகோணமலைக்கு செல்லும் வழியில் வாகரை வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டேன். இதைபோன்று கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கும் சென்று அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இனம், மதம், பிரதேச வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது பிரதான நோக்கமாகும்.

இந்த வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கட்டிடத்தை நிர்மாணித்து தந்த ஜேர்மன் செஞ்சிலுவைச்சங்கம், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுக்கு மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் மகத்தானவை. அனர்த்தங்களின் போதும் அவசியமான நேரத்திலும் மக்களுக்கு சிறந்த மனிதாபிமானப் பணிகளை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வருகின்றது' என மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வதிவிடப்பிரதி நிதி கிறன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் தேவராஜ், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சதுர்முகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் ரி.வசந்தராசா, சங்கத்தின் உப தலைவர் அப்துல்லா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .