2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, லோஹித், ஜிப்ரான்)

மஹிந்தோதய ஆய்வுகூடத் திட்டத்தின் கீழ், கல்குடா கல்வி வலயத்திலுள்ள கறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  செவ்வாயக்கிழமை நடைபெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் அருமைராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி  உட்பட கல்வி அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள ஆய்கூடமானது நவீன தொழிநுட்பத்துடன் கூடிய சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X